செய்திகள்
கைது

வங்கியில் கடன் வாங்கி தருவதாக மோசடி- பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2019-12-04 14:08 IST   |   Update On 2019-12-04 14:08:00 IST
வங்கியில் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

பாரிமுனை பகுதியை சேர்ந்த பவுசியா பேகம், பிரவீன்குமார், சந்துரு ஆகிய 3 பேரும் வடக்கு கடற்கரை காவல் தனித்தனியாக புகார் மனு அளித்தனர். அதில் சாலிகிராமத்தை சேர்ந்த மீனா மற்றும் பாரிமுனை கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த சங்கர் ஆகிய இருவரும் தங்களிடம் வங்கி லோன் வாங்கி தருவதாக கூறி அனைத்து ஆவணங்களையும் பெற்று கொண்டு தங்களுக்கு தெரியாமலே டி.வி, பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருட்களை தங்களுடைய பெயரில் லோனில் வாங்கி மோசடி செய்ததாக தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனா, சங்கரை கைது செய்தனர். அவர்கள் வீட்டுஉபயோக பொருட்களை வாங்கி ரூ. 8 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

Similar News