செய்திகள்
விஜயகாந்த்

விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 அவதூறு வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசு

Published On 2019-12-03 13:11 GMT   |   Update On 2019-12-03 13:11 GMT
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 அவதூறு வழக்குகளை தமிழக அரசு இன்று திரும்பப் பெற்றது.
சென்னை: 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பொதுக்கூட்டங்கள், பேட்டி, அறிக்கைகள் மூலம் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களை அவதூறாக சித்தரித்து பேசியதாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை விஜயகாந்த் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 வழக்குகளை தமிழக அரசு இன்று திரும்பப் பெற்றது.

மேலும், சிறப்பு நீதிமன்றம் மீதமுள்ள 3 வழக்குகள் குறித்த விசாரணையை டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.
Tags:    

Similar News