செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிப்பு

Published On 2019-11-30 10:01 GMT   |   Update On 2019-11-30 10:01 GMT
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பைவிட வரத்து கூடுதலாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 120 அடியாக தொடர்நது நீடித்து வருகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சீராக வந்து கொண்டிருக்கிறது.

நேற்று அணைக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை இது சற்று அதிகரித்து 6,043 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர் திறப்பைவிட தண்ணீர் வரத்து கூடுதலாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 120 அடியாக தொடர்நது நீடித்து வருகிறது.

Tags:    

Similar News