செய்திகள்
புகழேந்தி

அமமுகவை பதிவு செய்ய தடை கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Published On 2019-11-29 12:51 GMT   |   Update On 2019-11-29 12:51 GMT
அ.ம.மு.க.வை பதிவு செய்ய தடை கோரி முன்னாள் நிர்வாகி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
சென்னை:

ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வான டி.டி.வி. தினகரன் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 15ந்தேதி மதுரை மாவட்டம் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அ.ம.மு.க.) என்ற பெயரிலான கட்சியை தொடங்கினார்.  

அதனுடன், கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களுடன் நடுவில், மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா படம் பொறிக்கப்பட்ட கட்சி கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.

இக்கட்சியின் முன்னாள் நிர்வாகியாக இருந்த புகழேந்தி, அ.ம.மு.க.வை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அந்த மனுவில், கட்சியை பதிவு செய்ய கோரிய விண்ணப்பத்துடன் பிரமாணப்பத்திரம் அளித்த 14 பேர் கட்சியில் இருந்து விலகி விட்டனர். அதனால் பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் கட்சியை பதிவு செய்யக்கூடாது என்று தெரிவித்து உள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டவிதிகளை மீறி செயல்படுவதாக மனுவில் புகழேந்தி குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார். இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
Tags:    

Similar News