பாவூர்சத்திரம் அருகே இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
பாவூர்சத்திரம் அருகே இளம்பெண் மாயம்
பதிவு: நவம்பர் 28, 2019 18:13
மாயம்
நெல்லை:
பாவூர்சத்திரம் அருகே உள்ள நாவல்குளத்தை சேர்ந்தவர் இசக்கி. இவரது மகள் முத்துசெல்வி(வயது 23). இவருக்கும், கடையநல்லூரை சேர்ந்த முப்புடாதி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் கடந்த 21-ந்தேதி முத்துசெல்வி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு கடையநல்லூரில் இருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை என தெரிகிறது.
இதையடுத்து அவரது தந்தை இசக்கி தனது உறவினர்கள் வீடுகளிலும், அக்கம் பக்கத்தினரிடமும் விசாரித்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் முத்துசெல்வி கிடைக்காததால் அவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான முத்துசெல்வியை தேடி வருகிறார்கள்.