செய்திகள்
அப்துல் லத்தீப்

பாத்திமா இறப்பு குறித்து பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன்- அப்துல் லத்தீப் பேட்டி

Published On 2019-11-27 15:40 GMT   |   Update On 2019-11-27 15:40 GMT
சென்னை ஐ.ஐ.டி. மாணவி இறப்பு குறித்து பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன் என்று அவரது தந்தை அப்துல் லத்தீப் கூறியுள்ளார்.
சென்னை:

சென்னை ஐ.ஐ.டி.யில் தங்கி படித்து வந்த கேரள மாணவி பாத்திமா, கடந்த 9-ந்தேதி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு 3 பேராசிரியர்கள் காரணம் என மாணவி குறிப்பு எழுதி வைத்திருந்தார். 

பேராசிரியர்கள் துன்புறுத்தல் காரணமாகவே பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுபற்றி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.

தனது மகள் மரணத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டி அவரது தந்தை அப்துல் லத்தீப் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார். மாணவி தற்கொலை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு ஆஜராக சம்பந்தப்பட்ட 3 பேராசிரியர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், எனது மகள் இறப்பு விவகாரம் குறித்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளேன். வரும் திங்கட்கிழமையன்று பிரதமர் மோடியை சந்தித்து பாத்திமா இறப்பு குறித்து எடுத்துரைப்பேன் என்று அப்துல் லத்தீப் கூறியுள்ளார்.
Tags:    

Similar News