செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்

வடகிழக்கு பருவமழை குறைந்ததற்கு காரணம் என்ன?

Published On 2019-11-27 03:09 GMT   |   Update On 2019-11-27 03:09 GMT
வடகிழக்கு பருவமழை குறைந்ததற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லை. பெரும்பாலான இடங்களில் மழை குறைவாகவே பதிவாகி இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-



வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த மாதம் 16-ந்தேதி வழக்கத்தைவிட முன்னதாகவே தொடங்கினாலும், எதிர்பார்த்த மழையை இன்னும் பெறவில்லை. கடந்த மாதம் முதல் தற்போது வரை 34 செ.மீ. மழை பெற வேண்டும். ஆனால் 30 செ.மீ. மழை தான் இதுவரை பதிவாகி இருக்கிறது. இது இயல்பை விட 11 சதவீதம் குறைவு ஆகும். இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் வெப்பம் இயல்பை விட 2 டிகிரி அதிகமாகவும், கிழக்கு பகுதியில் இயல்பைவிட 2 டிகிரி குறைவாகவும் உள்ளது. கிழக்கு பகுதியில் இயல்பான அளவு வெப்பம் இருந்தால் தான் நமக்கு தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலம் உருவாகி மழை அதிகம் கிடைக்கும். தற்போது அது குறைவாக இருப்பதால் நமக்கு கிடைக்க வேண்டிய மழை ஆப்பிரிக்கா மற்றும் கென்யாவில் கொட்டி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News