செய்திகள்
கனிமொழி எம்பி

நூலகம் மூலம் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளலாம்-கனிமொழி எம்.பி. பேச்சு

Published On 2019-11-25 10:06 GMT   |   Update On 2019-11-25 10:06 GMT
இளைஞர்களும், மாணவர்களும் நூலகம் மூலம் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளலாம் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் ரெட்டியபட்டியில் ரூ. 32 லட்சம் மதிப்பீட்டில் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு வரவேற்று பேசினார். அருப்புக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

தற்போது தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் சினிமா தியேட்டர் உள்ளது. ஆனால் எல்லா ஊர்களிலும் நூலகம் இல்லை.

நூலகம் இருந்தால் அந்த ஊரில் உள்ள இளை ஞர்களும் மாணவர்களும் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளலாம். தி.மு.க. ஆட்சியின்போது எல்லா கிராமங்களிலும் நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்று சட்டசபையில் கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றி, அதன்படி செயல்படுத்தி வந்தார்.

அதுபோலவே சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று பிரம்மாண்டமான நூலகத்தை நிறுவினார். தற்போது அந்த நூலகம் மருத்துவமனையாக மாற்றப்படும் சூழ்நிலையும் வந்துள்ளது.

நூலகம் தான் மாணவர்களுக்கு அறிவுத்திறனை புகட்ட கூடியதாக அமையும். உலகத்தில் மிகப்பெரிய தலைவர்கள் எல்லாம் புத்தகத்தை வாசித்து மிகப்பெரும் தலைவர்களாக உருவெடுத்தனர்.

நான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது மாநிலங்களவை உறுப்பினர் நிதி எப்போது வருகிறது என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். அந்த நிதியை தங்கம் தென்னரசு என்னிடம் வந்து எங்களது தொகுதியில் மிகவும் பின்தங்கிய மக்கள் வசித்து வருகின்றனர். எனவே எங்களது தொகுதி மக்களுக்கு நிதி தாருங்கள் என்று கேட்டு பெற்றுவிடுவார்.

அதேபோல தான் தற்போதும் காரியாபட்டியில் உள்ள நூலகத்திற்கு ரூ.16 லட்சம் எம்.ரெட்டியபட்டியில் உள்ள நூலகத்திற்கு ரூ.16 லட்சமும் மொத்தம் ரூ.32 லட்சம் செலவில் இரண்டு நூலகக் கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நூலக கட்டிடங்களை திறந்து வைத்து மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவை புகட்டுவதை எண்ணி நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், காரியாபட்டி நகர செயலாளர் செந்தில், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தமிழ் வாணன், நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் போஸ் தேவர், கண்ணன், திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் பொண்ணு தம்பி, சந்தன பாண்டியன், மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதி அழகர்சாமி, மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர்கள் ஆவியூர் செல்வி, ராஜேஸ்வரி, உடையனாம்பட்டி, ஊராட்சி செயலாளர் ராக்கு, பொதுக்குழு உறுப்பினர்கள் செம்பொன். நெருஞ்சி சந்திரன் அருப்புக் கோட்டை நவநீதன், மாவட்ட தொண்டரணி அமைப் பாளர் செல்லப்பா, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, தோப்பூர் தங்கபாண்டியன், ஒன்றிய பிரதிநிதி கல்யாணி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் கருப்பையா, நகர தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் மனோஜ், பிரபாகர், சங்கரேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News