செய்திகள்
முக ஸ்டாலின்

பாலில் நச்சுத்தன்மை குறித்து தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் - முக ஸ்டாலின்

Published On 2019-11-24 03:54 GMT   |   Update On 2019-11-24 03:54 GMT
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாக உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பாராளுமன்றத்தில் பேசிய மத்திய மந்திரி, தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகமுள்ளது என தெரிவித்திருந்தார். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாக உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து.

இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News