செய்திகள்
மழை

திண்டுக்கல் அருகே கன மழைக்கு இடிந்த சுவர்

Published On 2019-11-22 14:19 GMT   |   Update On 2019-11-22 14:19 GMT
திண்டுக்கல் அருகே கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்து சேதமானது. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியம் ராமன்செட்டிபட்டியை சேர்ந்தவர் சுப்பம்மாள் (வயது70) கூலித்தொழிலாளி. இவர் தனது மகன் கோவிந்தம்மாள், மருமகன் செல்வம், பேத்தி வளர்மதி ஆகியோர்களுடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு இப்பகுதியில் கன மழை பெய்தது. இரவு சுப்பம்மாள் மற்றும் குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டின் சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக வெளியே விழுந்ததால் சுப்பம்மாள் மற்றும் குடும்பத்தினர் காயமின்றி உயிர்தப்பினர். இரவு முழுவதும் பக்கத்து வீட்டில் தங்கினர். கூலி வேலைக்கு செல்லும் தங்களது வீடு இடிந்து விட்டது. இதனால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News