செய்திகள்
சாக்கடை கால்வாய்

அரூர் பாட்ஷா பேட்டையில் சாக்கடை கால்வாயை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

Published On 2019-11-22 12:49 GMT   |   Update On 2019-11-22 12:49 GMT
அரூர் பாட்ஷா பேட்டையில் கழிவுநீர் கால்வாயை பேரூராட்சி நிர்வாகம் தூர்வார வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரூர்:

அரூர் பேரூராட்சி நான்காவது வார்டு கீழ் பாட்சா பேட்டையில் ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரை கொண்டுசெல்ல சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. மேலும், தற்போது மழை காலம் என்பதால் கழிவுநீரானது சாலைகளில் தேங்கி நிற்பதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இப்பகுதி பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

பேரூராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News