செய்திகள்
கைது

ஆரணியில் போலி டாக்டர் கைது

Published On 2019-11-22 10:58 GMT   |   Update On 2019-11-22 10:58 GMT
ஆரணியில் போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி:

ஆரணி அடுத்த ராட்டின மங்கலம் கிராமத்தில் போலி டாக்டர் ஒருவர் பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமிக்கு பல்வேறு புகார்கள் வந்தது கலெக்டர் உத்தரவின் பேரில் ஆரணி மருத்துவமனை மருத்துவ அலுவலர் நந்தினி தலைமையிலான மருத்துவ குழுவினர் ராட்டினமங்கலம் கிராமத்திற்கு சென்றனர்.

அப்போது அங்குள்ள கிளினீக்கில் பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து கொண்டு இருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே ஊரை சேர்ந்த பாபு (வயது40) என்பதும். இவர் லேப் டெக்னீசியன் படித்துவிட்டு பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது.

அங்கிருந்த மருந்து மாத்திரை மற்றும் ஊசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை பிடித்தது ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.

Tags:    

Similar News