செய்திகள்
வக்கீல்கள் போராட்டம்

கோவையில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2019-11-22 10:18 GMT   |   Update On 2019-11-22 10:18 GMT
கோவை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தினர் கோவை கோர்ட்டு வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் கீழமை கோர்ட்டுகளில் நீதிபதி தேர்வுக்கு தமிழ் தெரியாதவர்கள் விண்ணப்பிக்கவும், தேர்வு எழுதவும் தேர்வாணையம் அனுமதித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தினர் கோவை கோர்ட்டு வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வக்கீல்கள் சங்கத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சுதீஷ், தமிழ்நாடு-பாண்டிச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவையில் 3 ஆயிரம் வக்கீல்களும், மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலூர், மதுக்கரை கோர்ட்டுகளில் 500 வக்கீல்களும் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பால் வழக்குகள் தேக்கம் அடைந்தது.

Tags:    

Similar News