செய்திகள்
திமுக

கோவையில் 28-ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்- கார்த்திக் எம்.எல்.ஏ. அறிவிப்பு

Published On 2019-11-20 11:52 GMT   |   Update On 2019-11-20 11:52 GMT
பல்வேறு அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும், கோவை மாநகராட்சியை கண்டித்து வருகிற 28-ந்தேதி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கோவை:

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது-

கோவையில் குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். கோவை மாநகராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகள், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும், கோவை மாநகராட்சியை கண்டித்து வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் சொத்து வரி உயர்வை நிறுத்தி வைத்து இது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்திருப்பதாக தெரிவித்து உள்ளார்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே சொத்து வரி உயர்வை முழுமையாக குறைப்பதற்கு இந்த அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News