செய்திகள்
போலியோ சொட்டு மருந்து

ஜனவரி 19-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

Published On 2019-11-20 09:22 GMT   |   Update On 2019-11-20 09:22 GMT
நாடு முழுவதும் ஜனவரி 19-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. 5 வயதுக்குட்பட்ட சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் ஜனவரி மாதம் 19-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக கடந்த 1994-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, மார்ச் மாதங்களில் 2 தவணையாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.

போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் சேர்ந்ததை தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் ஜனவரி 19-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அன்றைய தினம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவ உதவியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Tags:    

Similar News