செய்திகள்
ரஜினிகாந்த்

சூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி

Published On 2019-11-19 14:38 GMT   |   Update On 2019-11-19 14:38 GMT
நானும், கமலும், இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை:

நானும், ரஜினியும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில்,  நடிகர் ரஜினிகாந்த் கோவா செல்லுவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

தமிழக மக்களின் நலனுக்காக நானும், கமலும், இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம். 

துணை முதல்வர் ஓபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து. அதுகுறித்து பதில் கூற விரும்ப வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News