செய்திகள்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மகேஷ்வரன்.

அதிகாரிகள் திட்டியதால் துப்புரவு தொழிலாளி தற்கொலை முயற்சி

Published On 2019-11-19 12:21 GMT   |   Update On 2019-11-19 12:21 GMT
அதிகாரிகள் திட்டியதால் திருவாரூர் நகராட்சி துப்புரவு தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர்:

திருவாரூர் நகராட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 30). இவர் கடந்த 10 ஆண்டுகளாக திருவாரூர் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற சிறிது நேரத்திலேயே மகேஸ்வரன் வீடு திரும்பினார். பின்னர் அவர் வீட்டில் படுக்க சென்றார். இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி சுபா, கணவரை எழுப்பி விசாரித்தார்.

வேலைக்கு சென்ற போது நகராட்சி அதிகாரிகள் தன்னை திட்டியதால் மனமுடைந்து வி‌ஷம் குடித்து விட்டதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுபா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருவாரூர் நகராட்சி துப்புரவு தொழிலாளி மகேஸ்வரன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மகேஸ்வரனை தற்கொலைக்கு தூண்டிய அதிகாரிகளை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் சி.ஐ.டி.யூ. உள்ளாட்சி ஊழியர் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

Tags:    

Similar News