செய்திகள்
கோப்பு படம்

திருப்பூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை - 2 வாலிபர்கள் கைது

Published On 2019-11-19 12:10 GMT   |   Update On 2019-11-19 12:10 GMT
திருப்பூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 2 வாலிபர்கள் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் ஆண்டிப்பாளையம் நொய்யல் ஆற்றங்கரையில் சிலர் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதாக திருப்பூர் மத்திய பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அப் பகுதியில் 4 வாலிபர்கள் நின்று கொண்டு அந்த பகுதி வழியாக வரும் பனியன் தொழிலாளர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து கொண்டிருந்த போது போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.

அப்போது 2 பேர் தப்பி ஓடி விட்டனர். மற்ற 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கினார்கள். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, ரூ. 3 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 2 பேரிடம் விசாரித்த போது அவர்கள் மதுரையை சேர்ந்த முருகன் (32), திருப்பூர் கருவம்பாளையம் செந்தில்குமார் (23) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News