செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா?- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2019-11-18 13:49 GMT   |   Update On 2019-11-18 13:49 GMT
தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா? என்று விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
விருதுநகர்:

நடிகர் ரஜினி, கமல், விஜய்தான் அரசியலுக்கு வர வேண்டுமா? தல அஜித் வரக்கூடாதா? என்று விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசியதாவது:-

அதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை கூட நாங்கள் களமிறக்குவோம். நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ரஜினி கூறியதில் எந்த தவறும் இல்லை. ரஜினி ஆன்மிகவாதி என்பதால் நாளை எதுவும் நடக்கலாம் என ஆன்மிக கோணத்தில் கூறியுள்ளார். 

பாட்ஷா படம் வெளியானபோது ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் ஆட்சியை பிடித்திருப்பார், ஆனால் காலம் தாழ்த்திவிட்டார். 

அதிமுக ஜெயிப்பதற்காக எந்தவித சித்து விளையாட்டுகளும் செய்வோம் என பேசியது உண்மைதான். 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News