செய்திகள்
தற்கொலை

களியக்காவிளை அருகே கடன் தொல்லை- பெயிண்டர் தற்கொலை

Published On 2019-11-18 11:06 GMT   |   Update On 2019-11-18 11:06 GMT
களியக்காவிளை அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்:

களியக்காவிளை அடுத்த குழிவிளை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 42) பெயிண்டர். இவர் டெம்போவும் வைத்து தொழிலில் செய்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் வாங்கியிருந்தார். இந்த நிலையில் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாமல் தவித்து வந்தார்.

இதனால் அவர் தனது டெம்போவை விற்று வாங்கிய கடனை அடைத்து உள்ளார். ஆனாலும் கடன் இருந்துவந்தது. இதில் மனவேதனையுடன் காணப்பட்டு வந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக் டர் சொர்ணலதா மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித் துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஆரல்வாய்மொழி செண்பகராமன்புதூர் பெத்தேல் நகர் பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் ஆண்டனி (29). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த அவர் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சங்கரகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News