செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாணவ-மாணவிகள் ‘ராக்கி’ கயிறு கட்டி ‘ரக்‌ஷா பந்தன்’ விழா கொண்டாடினர்

சைல்டு லைன் சார்பில் ‘ரக்‌ஷா பந்தன்’ விழா

Published On 2019-11-16 17:57 GMT   |   Update On 2019-11-16 17:57 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் சைல்டுலைன் சார்பில் மாணவ-மாணவிகள் ‘ராக்கி’ கயிறு கட்டி ‘ரக்‌ஷா பந்தன்’ விழா கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர்:

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்தோ அறக்கட்டளை மூலம் சைல்டுலைன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சைல்டுலைன் உங்கள் நண்பன் வார விழா மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தொடங்கியது. வார விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பெரம்பலூர் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் ‘ராக்கி’ கயிறு கட்டி ‘ரக்‌ஷா பந்தன்’ விழா கொண்டாடப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிரிதர் ஆகியோருக்கும் மாணவ- மாணவிகள் ‘ராக்கி’ கயிறு கட்டி மகிழ்ந்தனர்.

இந்தோ அறக்கட்டளையின் மேலாளர் செல்வகுமார், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் திவ்யா, ஆலோசகர் கோகிலா, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மேரி எஸ்கலின் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து சைல்டுலைன் மூலம் அந்தனூர், சிறுவாச்சூர், வாலிகண்டபுரம், செட்டிகுளம், ஒதியம் ஆகிய அரசு பள்ளிகளில் குழந்தைகள் மீது பெற்றோரின் எதிர்பார்ப்பு, பெற்றோரின் மீது குழந்தைகளின் எதிர்பார்ப்பு குறித்த பட்டிமன்றம் நடத்தப்பட்டது.
Tags:    

Similar News