செய்திகள்
கோப்பு படம்

4 கல்லூரி மாணவர்கள் பலியான இடத்தில் தண்டவாளத்தில் போதையில் சுற்றித்திரிந்த 17 பேர் மீது வழக்கு

Published On 2019-11-16 14:03 GMT   |   Update On 2019-11-16 14:03 GMT
கோவை அருகே ரெயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் பலியான இடத்தில் தண்டவாளத்தில் போதையில் சுற்றித்திரிந்த 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிங்காநல்லூர்:

கோவை சூலூர் அருகே உள்ள ராவத்தூர் - முத்து கவுண்டன்புதூர் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து மதுக்குடித்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் உடல் சிதைந்து பலியானார்கள். கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் கோவையை மட்டுமல்லாது தமிழகத்தை உலுக்கியது. மதுவை விற்பனை செய்யக்கூடாது என்றும், தண்ட வாளப்பகுதியில் போலீசார் ரோந்து வரவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்தநிலையில் விபத்து நடந்த பகுதியில் தண்டவாளத்தில் இரவு நேரங்களில் சிலர் விபரீதமாக சுற்றித்திரிந்தனர். இதனையடுத்து சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் அர்ஜூன், குமார் மற்றும் காசிபாண்டியன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் ராமானுஜம் நகர், நீலிகோணம்பாளையம், ஒண்டிப்புதூர், சூர்யா நகர் ஆகிய பகுதிகளில் போதை மற்றும் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 17 வாலிபர்களை பிடித்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெரும்பாலனோர் குடிப்போதையில் இருந்தது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில் தண்டவாளம் மற்றும் அதன் அருகே குடிபோதை மற்றும் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News