செய்திகள்
கோப்பு படம்

ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்

Published On 2019-11-16 10:07 GMT   |   Update On 2019-11-16 10:07 GMT
பிரதமரை விமர்சித்த ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடியை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி காவலாளியே திருடன் என விமர்சித்திருந்தார்.

ரபேல் போர் விமானம் வாங்குவதில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்ததாக கூறி விமர்சித்தார்.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடைபெறவில்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மேலும் ராகுல்காந்தி கூறிய கருத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து பா.ஜனதாவினர் நாடு முழுவதும் பிரதமரை விமர்சித்த ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் என பொய் பிரசாரம் செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுவை மாநில பா.ஜனதா சார்பில் இந்திராகாந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சாமி நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

சங்கர் எம்.எல்.ஏ., மாநில துணைத்தலைவர்கள் செல்வம்,ஏம்பலம் செல்வம், துரை கணேசன், மாநில செயலாளர்கள் நாகராஜ், முருகன், ஜெயந்தி, சாய் சரவணன், லட்சுமி, தேசியகுழு உறுப்பினர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பப்பட்டது.
Tags:    

Similar News