செய்திகள்
கேஎஸ் அழகிரி

ரபேல் வழக்கில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்படும் - கே.எஸ்.அழகிரி

Published On 2019-11-14 09:07 GMT   |   Update On 2019-11-14 09:07 GMT
ரபேல் வழக்கில் காங்கிரஸ் சார்பில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ரபேல் போர் விமானம் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.



இது முழுக்க முழுக்க அரசாங்கம் கொடுத்த தகவல்களை கொண்டது. எனவே நடந்த உண்மை வெளிவரவில்லை. இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்படும்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும்.

பெண்கள் கோவில்களில் கருவறை வரை சென்று வழிபட உரிமை உண்டு. மற்ற மதங்களில் பெண்களை அனுமதிப்பது பற்றிய பிரச்சினையை அந்தந்த மத தலைவர்கள் முடிவு செய்யட்டும். இந்து மதத்தில் இருக்கும் குறைகளை நாம் போக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேருவின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 150 அடி உயர பிரமாண்ட கொடி ஏற்றும் வெள்ளோட்டம் நிகழ்ச்சி கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, மாநில நிர்வாகிகள் கோபண்ணா, நாசே ராஜேஷ், செல்வம், அசன் மவுலானா, ராயபுரம் மனோகர், ரங்கபாஷ்யம், ஏ.ஜெ.தாஸ், முன்னாள் எம்.பி. ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. உ.பலராமன், மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், சிவராஜசேகரன் மற்றும் நாஞ்சில் பிரசாத் தமிழ்செல்வன், நவாஸ், திருவான்மியூர் மனோகரன் சுமதி அன்பரசன், மயிலை தரணி, தாமோதரன், பொன்கிருஷ்ணமூர்த்தி, அகரம் கோபி, கொளத்தூர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News