செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட்டு

நோயாளிகளை கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வருவதில்லை- சுகாதார இயக்குனரிடம் இந்திய கம்யூ. புகார்

Published On 2019-11-13 12:40 GMT   |   Update On 2019-11-13 12:40 GMT
உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்போது நோயாளிகளை கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வருவதில்லை என்று சுகாதார இயக்குனரிடம் இந்திய கம்யூனிஸ்ட்டு புகார் அளித்துள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்ட்டு செயலாளர் சலீம சுகாதாரத்துறை இயக்குனருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் 27 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு மதியம் 2 மணிக்கு மேல் நோயாளிகள் இழப்பு, மார்புவலி, மூச்சு விட சிரமப்படும் ஆஸ்துமா, விபத்து போன்ற நோயாளிகளுக்கு உடனே சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஆம்புலன்ஸ் இல்லை. எனவே 108 ஆன்புலன்ஸ் வரவழைக்க போன் அடித்தால் போனை எடுப்பதில்லை. பின்பு நோயாளிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செல்கின்றார்கள்.

ஆபத்து காலங்களில் போன் அடித்தாலும் எடுப்பதில்லை. உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் போது உடனே நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்காகத்தான் 108 ஆம்புலன்ஸ் சேவை உருவாக்கப்பட்டது. இந்நோக்கம் செயல்படுவதில் பலகீனம் உள்ளது. 108 ஆம்புலன்ஸ் 23 தொகுதி களுக்கும் 8 ஆம்புலன்ஸ் மட்டும்தான் உள்ளது.

மேலும் சடலவண்டி என்பதும் இல்லை. 23 தொகுதிகளிலும் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகின்றது. உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் சாலை பாதுகாப்பு நிதியினை இதுபோன்ற காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளது.

எனவே மாநில மக்களின் நலனுக்காகவும், அவசர நிலை நோயாளியின் தன்மை கருதியும், உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் துரிதமாக செயல்படுவதற்கும் ஒவ்வொரு வண்டிக்கும் டெக்னிசியன்களையும் நியமனம் செய்ய வேண்டும். மேலும் 108 ஆம்புலன்ஸ் கூடுலாக செயல்படுத்துவதற்கும் ஆவன செய்யவேண்டும். குறைந்த பட்சம் 5 சடல வண்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

இவ்வாறு சலீம் கடிதத்தில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News