செய்திகள்
மர்ம காய்ச்சல்

வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் - திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்த பொதுமக்கள்

Published On 2019-11-13 08:59 GMT   |   Update On 2019-11-13 08:59 GMT
பருவ நிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் குவியத் தொடங்கியுள்ளனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக ஓரளவு மழைப் பொழிவு இருந்தது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் காலை நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் மதிய பொழுதில் வெயில் அதிகரித்து காணப்படுகிறது.

மாறி வரும் பருவ நிலையால் பொதுமக்கள் காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உபாதைகளால் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் காய்ச்சலால் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த காய்ச்சல் கண்டவர்கள் உடல் வலி, கண் எரிச்சல் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அதிக அளவு பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். சிகிச்சை பெறவும், மாத்திரை மருந்துகள் வாங்கவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் குழந்தைகள் அழத் தொடங்கினர். இருந்தபோதும் காத்திருந்து சிகிச்சை பெற்று சென்றனர்.
Tags:    

Similar News