செய்திகள்
குஷ்பு

டுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா?

Published On 2019-11-13 04:46 GMT   |   Update On 2019-11-13 04:46 GMT
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு டுவிட்டரில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.
சென்னை:

காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராக இருக்கும் குஷ்பு டுவிட்டரில் தீவிரமாக இயங்கி வந்தார்.

பா.ஜனதா கட்சியினர் தொடர்பான செய்திகளுக்கு தன்னுடைய எதிர்ப்புகள் அனைத்தையுமே உடனுக்குடன் தனது டுவிட்டர் பக்கத்திலேயே பதிவிட்டு வந்தார். மேலும் கணவர் சுந்தர்.சி இயக்கி வரும் படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் குறித்த செய்திகள், டிரெய்லர் வெளியீடு ஆகியவற்றையும் வெளியிடுவார்.

தன்னை ஒரு முஸ்லிம் மதத்தை சார்ந்தவர் என்று விமர்சனம் வந்தபோது, ‘ஆம். நான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்தான். என் பெயர் நக்கத் கான்’ என்று வெளிப்படையாகவே டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

இவ்வாறு டுவிட்டரில் தொடர்ச்சியாக இயங்கி வந்தவர், தற்போது தனது பக்கத்தை நீக்கிவிட்டார். இதற்கு எந்தவித காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக குஷ்புவிடம் கேட்டபோது, “எனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்து விட்டேன். டுவிட்டர் தளத்தில் இயங்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். இதற்கு தனிப்பட்ட காரணம் என்று எதுவுமில்லை. நிம்மதியாக வாழ விரும்புகிறேன். டுவிட்டர் தளத்தில் நிறைய எதிர்மறை வி‌ஷயங்களே உள்ளன. ஆகவே, நான் எனது இயல்பில் இல்லை” என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News