செய்திகள்
அபிராமி

காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்- தஞ்சை பெண் எஸ்.பி.யிடம் புகார்

Published On 2019-11-12 10:07 GMT   |   Update On 2019-11-12 10:07 GMT
கர்ப்பத்தை கலைத்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை பெண் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்:

தஞ்சை வங்கி ஊழியர் காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் அபிராமி (வயது 21). தஞ்சை மாதாக்கோட்டையை சேர்ந்த ஸ்டான்லி பென்னி ராபர்ட் (27).

அபிராமிக்கும், ராபர்ட்டுக்கும் இடையே கடந்த 2017-ம் ஆண்டில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். இதில் அபிராமி கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் அபிராமி, காதலனிடம் தன்னை திருமணம் செய்ய வலியுறுத்தினார். இதற்கு ராபர்ட், கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதை நம்பிய அபிராமி, கர்ப்பத்தை கலைத்தார்.

இதையடுத்து காதலனிடம் மீண்டும் திருமணம் செய்ய கேட்ட போது, அவர் மறுத்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அபிராமி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தஞ்சை மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார், ராபர்ட்டை அழைத்து விசாரித்தபோது, விரைவில் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.

இந்த நிலையில் ராபர்ட்டுக்கும் வேறொரு இளம்பெண்ணுக்கும் தஞ்சையில் நாளை (13-ந் தேதி) திருமணம் நடைபெறுவதாக அபிராமிக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அபிராமி, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்துக்கு இன்று வந்து புகார் செய்தார்.

அதில் தன்னை காதலித்து கர்ப்பிணியாக்கி ஏமாற்றிய காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். காதலன் ராபர்டுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News