செய்திகள்
டெங்கு காய்ச்சல் (கோப்புப்படம்)

திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர் பாதிப்பு

Published On 2019-11-12 09:54 GMT   |   Update On 2019-11-12 09:54 GMT
திருப்பூர் சிட்கோ பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் முதலிப்பாளையம் சிட்கோவில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன.

இங்கு வடமாநில தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அப்பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். திருப்பூர் முதலிப்பாளையம் பகுதியில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை இப்பகுதியில் 12 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கோவை மற்றும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் மாவட்ட சுகாதார பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு புழு உள்ளதா? என கண்காணித்து வருகிறார்கள்.

டெங்கு காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து முதலிப்பாளையம் பகுதிக்கு கூடுதல் சுகாதார பணியாளர்களை மாவட்ட நிர்வாகம் நியமித்து உள்ளது.

முதலிப்பாளையம் பகுதியில் 4 சுகாதார மையங்கள் உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு சுகாதார நிலையங்களுக்கும் கூடுதலாக ஒரு சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் கொசு ஒழிப்பு பணியில் கூடுதலாக 48 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 500 வீடுகளுக்கு ஒரு சுகாதார ஆய்வாளர்கள், 12 கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தினமும் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News