செய்திகள்
கைது

பூந்தமல்லி அருகே போலீஸ்காரரை தாக்கி செல்போன் பறிப்பு- 3 பேர் கைது

Published On 2019-11-12 06:56 GMT   |   Update On 2019-11-12 06:56 GMT
பூந்தமல்லி அருகே போலீஸ்காரரை தாக்கி செல்போன் பறித்தது தொடர்பாக மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:

ஆவடியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு அவர் பணி முடிந்து சாதாரண உடையில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். நள்ளிரவு 1 மணி அளவில் பூந்தமல்லி அருகே சென்னிகுப்பம் பைபாஸ் ரோட்டில் சென்ற போது வண்டியை நிறுத்திவிட்டு செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 3 மர்மநபர்கள் போலீஸ்காரர் சிலம்பரசனை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிலம்பரசன் அவ்வழியே ரோந்து வந்த பூந்தமல்லி போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக அனைத்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது ஆவடி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் கீழே பதுங்கி இருந்த 3 பேரை பிடித்தனர். அவர்கள் அனைவரும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், போலீஸ்காரர் சிலம்பரசனை தாக்கி செல்போன் பறித்து சென்றதும் தெரிந்தது. பிடிபட்ட 3 பேரும் மாணவர்கள் ஆவர். இதில் ஒருவர் 10-ம் வகுப்பும், மற்றொருவர் டிப்ளமோவும் படித்து வருகிறார்கள். அனைவரும் ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் இதே போல் மேலும் பல வழிப்பறிகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
Tags:    

Similar News