செய்திகள்
தமிழ்பல்கலைகழகம் சார்பில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக அழைப்பிதழில் திருவள்ளுவர் படம் குறித்து சர்ச்சை

Published On 2019-11-12 06:13 GMT   |   Update On 2019-11-12 06:13 GMT
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இலக்கிய துறை சார்பில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்ட அழைப்பிதழில் திருவள்ளுவர் படம் வைத்துள்ள விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் கடந்த 4-ந்தேதி மர்ம நபர்களால் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. இதனை கண்டித்து அனைத்து கட்சியினர், அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பேரதிர்வை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இலக்கிய துறை சார்பில் நாளை (13-ந் தேதி) சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்காக அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்ட அழைப்பிதழில் திருவள்ளுவர் படம் வைத்துள்ள விதம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த அழைப்பிதழில் திருவள்ளுவர் வலது கையில் இருக்க வேண்டிய எழுத்தாணி இடது கையிலும், இடது கையில் இருக்க வேண்டிய சுவடி வலது கையிலும் இருப்பது போல் மாற்றி அச்சடிக்கப்பட்டுள்ளது.

இது தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் புதிய அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News