செய்திகள்
மரணம்

வைகை ஆற்றில் மூழ்கி லாரி டிரைவர் பலி

Published On 2019-11-12 05:08 GMT   |   Update On 2019-11-12 05:08 GMT
வைகை ஆற்றில் மூழ்கி லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

தேனி மாவட்டம், சின்னமனூர் பத்ரா தெருவைச் சேர்ந்தவர் ரங்கநாதன் என்கிற கருப்பு (வயது 46), லாரி டிரைவர். இவர் நேற்றிரவு மதுரைக்கு இளநீர் லோடு ஏற்றி வந்தார்.

இரவு 10.30 மணியளவில் வைகை ஆற்றில் கை, கால் கழுவி விட்டு வருகிறேன் என்று கிளீனரிடம் சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பிறகு சுமார் 2 மணி நேரமாகியும் ரங்கநாதன் திரும்பவில்லை. அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ ஆகி இருந்தது.

இதையடுத்து கிளீனர் கொடுத்த தகவலின் பேரில் விளக்குத்தூண் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அனுப்பானடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கபபட்டது.

வைகை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால், ரங்கநாதன் நீரில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.

தீயணைப்பு படையின்னர் வைகை ஆற்றுக்குள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஓபுளா படித்துறை செக் போஸ்ட் அருகே ரங்கநாதனின் உடல் மீடகப்பட்டது.

விளக்குத்தூண் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று வைகை ஆற்றில் விழுந்து உயிருடன் மீட்கப்பட்டார்.

இந்த நிலையில் சின்னமனூர் லாரி டிரைவர்  வைகை ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News