செய்திகள்
கோப்பு படம்

ராமநாதபுரத்தில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

Published On 2019-11-11 14:27 GMT   |   Update On 2019-11-11 14:27 GMT
ராமநாதபுரத்தில் பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் என போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில், பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பாக, வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரை மாவட்ட காவல் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கருத்தரங்கு கூட்ட அறையில், காவல் கண்காணிப்பாளர் தலைமையில், அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் ‘காவல்துறை குறை தீர்ப்பு மனு விசாரணை முகாம்’ நடைபெறும்.

இந்த கூட்டத்தில், பொதுமக்களின் குறைகள் உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு நேரில் வர இயலாதவர்கள், 9489919722 9489919722 மற்றும் 8300031130 8300031130 கைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கண் பார்வையற்றவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாடிப்படி ஏற முடியாதவர்களின் புகார் தொடர்பாக, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள வரவேற்பாளர் மூலம் காவல் கண்காணிப்பாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் கண்காணிப்பாளர் கீழ் தளத்திற்கு வந்து, அப்புகார் மனுக்களை நேரில் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்வார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News