செய்திகள்
பொதுக்குழு மேடையில் முக ஸ்டாலின்

திமுக பொதுக்குழு - பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வலியுறுத்துவது உள்பட 21 தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2019-11-10 06:04 GMT   |   Update On 2019-11-10 06:04 GMT
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வலியுறுத்துவது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை:

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்பட பலர் பங்கேற்றனர். 

பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பொதுக்குழு கூட்டத்தில் பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மறைவுக்கும், ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: 



உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க அங்கீகாரம் அளித்தல், திருநங்கைகளை தி.மு.க.வில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்தல், தி.மு.க. அமைப்புத்தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடித்தல், இணைய தளம் மூலம் தி.மு.க. உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் கட்சி விதியில் திருத்தம் செய்தல், வெளிநாடுவாழ் இந்தியர்களை தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்தல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும். தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்தல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தல், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண வலியுறுத்தல் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
Tags:    

Similar News