செய்திகள்
சென்னை ஐகோர்ட்

திறந்தே இருக்கும் சென்னை ஐகோர்ட் கதவுகள் 24 மணி நேரம் மூடல் - காரணம் இதுதான்

Published On 2019-11-09 11:30 GMT   |   Update On 2019-11-09 15:27 GMT
சென்னை ஐகோர்ட்டின் அனைத்து கதவுகளும் இன்று இரவு 8 மணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை ஒருநாள் முழுவதும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட் 150 ஆண்டு பாரம்பரியம் மிக்கது. தினமும் ஏராளமான வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் இந்த வளாகம், சென்னையின் பரபரப்பான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஐகோர்ட் வளாகத்தின் கதவுகள் அனைத்தும் ஆண்டுக்கொரு முறை ஒரு நாள் முழுவதுமாக அடைக்கப்படுவது வழக்கம்.

ஐகோர்ட் என்பது பொதுமக்களுக்கான பொது இடம் அல்ல. அரசு சொத்து என்பதை நினைவூட்டி, உறுதிசெய்யும் விதமாக ஆண்டுக்கு ஒருநாள் கதவுகள் அனைத்தும் மூடப்படுகிறது.

பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் இந்த சம்பிரதாயம் இந்த ஆண்டில் இன்று கடைப்பிடிக்கப் படுகிறது. இதன்படி, இன்று இரவு 8 மணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை ஒருநாள் முழுவதும் ஐகோர்ட்டின் அனைத்துக் கதவுகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News