செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

கும்மிடிப்பூண்டி அருகே கியாஸ் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2019-11-07 08:51 GMT   |   Update On 2019-11-07 08:51 GMT
கும்மிப்பூண்டி அருகே கியாஸ் தொழிற்சாலையில் 5 பேரை வேலை நீக்கம் செய்ததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேசனுக்கு சொந்தமான சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை உள்ளது.

இங்கு தனியார் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 19 வருடங்களாக ஆலைக்கு நிலம் வழங்கிய 49 பேர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இதில் 5 பேரை ஆலை நிர்வாகத்தினர் வேலை நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து இன்று தொழிற்சாலை முன்பு சி.ஐ.டி.யூ-வின் தமிழ்நாடு மாநில பெட்ரோலிய தொழிற்சங்க தலைவர் கே.விஜயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனால் ஆலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை லாரிகளில் ஏற்றி இறக்கும் பணி இன்று பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுடன் தொழிற்சங்க நிர்வாகிகளும், ஆலை நிர்வாகத்தினரும் போலீசார் முன்னிலையில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News