செய்திகள்
தனியார் பள்ளி வளாகத்தில் சுகாதார துணை இயக்குனர் ஜெயந்தி தலைமையில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.

கொசுபுழு உற்பத்தி- தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Published On 2019-11-06 04:17 GMT   |   Update On 2019-11-06 04:17 GMT
பல்லடம் அருகே கொசுபுழு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சுகாதாரதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த பெண் குழந்தைக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் அந்த பள்ளி வளாகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பள்ளி வளாகத்தின் திறந்த நிலையில் இருந்த கீழ்நிலை தொட்டியில் கொசு புழுக்கள் அதிக அளவில் இருப்பதை கண்டறிந்தனர், இதையடுத்து பள்ளி வளாகத்தில் புழுக்கள் உருவாக காரணமாக இருந்ததாக கூறி ரூ. 10ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவற்றை உடனடியாக பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றது.

இதேபோல் பள்ளி வளாக பகுதிகளில் உள்ள வீடுகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ரியல் எஸ்டேட் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வீட்டுமனை தொட்டியில் கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதன் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News