செய்திகள்
அம்மா ஆம்புலன்ஸ் வாகனத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்

கால்நடைகளுக்கான அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு கூடுதல் வாகனங்கள்- முதலமைச்சர் துவக்கி வைத்தார்

Published On 2019-11-05 10:37 GMT   |   Update On 2019-11-05 10:37 GMT
கால்நடைகளுக்கான அவசர ஆம்புலன்ஸ் சேவைக்காக புதிதாக வாங்கப்பட்ட 22 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.
சென்னை:

தமிழகத்தில் கால்நடைகளுக்கு விரைந்து சென்று உயிர்காக்கும் சிகிச்சை அளிப்பதற்காக அம்மா ஆம்புலன்ஸ் சேவை (அனிமல் மெடிக்கல் மொபைல் ஆம்புலன்ஸ்) தொடங்கப்பட்டது. 2016ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இத்திட்டத்தை துவக்கி வைத்தார். முதலில் திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் தலா 2 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சேவையை மேலும் விரிவுடுத்தும் வகையில் 2.40 கோடி ரூபாய் செலவில் 22 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டன. இந்த ஆம்புலன்ஸ்களின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கால்நடைகளுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் 1962 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். உடனடியாக அவசர ஆம்புலன்ஸ் சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த ஆம்புலன்சில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு உதவியாளர் ஆகியோர் பணியில் இருப்பார்கள். நவீன மருத்துவ வசதிகள் மற்றும் கால்நடைகளின் உயிர்காக்க தேவையான மருந்துகள் இந்த ஆம்புலன்சில் இருக்கும். 
Tags:    

Similar News