செய்திகள்
டெங்கு காய்ச்சல்

டெங்கு கொசு: இரும்பு கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Published On 2019-11-05 06:50 GMT   |   Update On 2019-11-05 06:50 GMT
கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு கடையில் டெங்கு கொசு உற்பத்தி கண்டறியப்பட்டதையடுத்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர் முருகதாஸ் ஆகியோர் தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது சாமிரெட்டி கண்டிகை கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த இரும்புக் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News