செய்திகள்
வைகோ

மத்திய அரசின் சிறப்பு விருது- ரஜினிகாந்துக்கு வைகோ வாழ்த்து

Published On 2019-11-03 14:15 GMT   |   Update On 2019-11-03 14:15 GMT
நடிகர் ரஜினிகாந்த் திரைப்படத்துறைக்கு ஆற்றிய சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவருக்கு மத்திய அரசு சிறப்பு விருது அறிவித்துள்ளதால் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் திரைப்படத்துறைக்கு ஆற்றிய சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவருக்கு மத்திய அரசு சிறப்பு விருது அறிவித்துள்ளது. கோவாவில் நடைபெறும் சர்வதேச பட விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

சிறப்பு விருது பெறும் ரஜினிகாந்த்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். அப்போது, ‘கலையுலகம் கொண்டாடும் பொன் விழா கதாநாயகனான உங்களுக்கு சிறப்பு விருது பெறும் முழு தகுதியும் உண்டு. விருதுபெறுவது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. இன்னும் பல உலகளாவிய விருதுகள் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்’ என்றார். வைகோ வாழ்த்தியதற்கு ரஜினி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Tags:    

Similar News