செய்திகள்
கோப்பு படம்

காதணி விழாவுக்கு பிளக்ஸ் பேனர் வைத்த 2 பேர் கைது

Published On 2019-10-31 10:25 GMT   |   Update On 2019-10-31 10:25 GMT
கோவை அருகே காதணி விழாவுக்கு தடையை மீறி பிளக்ஸ் பேனர் வைத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

சென்னையில் பிளக்ஸ் பேனர் விழுந்து என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தடையை மீறி பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பிளக்ஸ் பேனர் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தடையை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகிறதா? என போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று ஆனைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பொள்ளாச்சி- ஆனைமலை ரோட்டில் ரோந்து சென்றார்.

அப்போது செல்வபுரம் பிரிவு அருகே காளியாபுரத்தை சேர்ந்த ஆனந்தன் (வயது 34) என்பவர் தனது குழந்தைகளின் காதணி விழாவுக்காக தடையை மீறி பிளக்ஸ் பேனர் வைத்து இருந்தார்.

இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பிளக்ஸ் பேனரை அகற்றினார். மேலும் தடையை மீறி பிளக்ஸ் பேனர் வைத்த ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் பொள்ளாச்சி- ஆனைமலை ரோட்டில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள திருமணம் மண்டபம் முன்பு ஆனைமலை காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரகாஷ் (37). என்பவர் தனது குடும்ப காதணி விழாவுக்காக தடையை மீறி பிளக்ஸ் பேனர் வைத்து இருந்தார். இதனை போலீசார் அகற்றினர். மேலும் பேனரை வைத்த பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News