செய்திகள்
கோப்பு படம்.

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

Published On 2019-10-30 15:45 GMT   |   Update On 2019-10-30 15:45 GMT
புதுச்சேரியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அரபிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் கடந்த ஒரு வாரமாக மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. சில நாட்களாக இரவில் மட்டும் மழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக இரவில் மட்டுமின்றி பகலிலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. நேற்று காலை முதல் வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது. குளிர்ந்த காற்று வீசியது. அவ்வப்போது மழை பெய்தது. மாலை 6 மணிக்கு மேல் கனமழை பெய்ய தொடங்கியது. விட்டு, விட்டு பெய்த கனமழை விடிய, விடிய தொடர்ந்து கொட்டியது. இன்று அதிகாலை முதல் மழை பெய்தபடியே உள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக புதுவையில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் நீலகிரியில் உதகை , குந்தா, குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News