செய்திகள்
திருப்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்.

திருப்பூர் பஸ், ரெயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

Published On 2019-10-26 04:43 GMT   |   Update On 2019-10-26 04:43 GMT
தீபாவளி பண்டிகையை கொண்டாட 10 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் நேற்று முதல் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
திருப்பூர்:

டாலர் சிட்டியான திருப்பூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களுடன் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். கடந்த 2 நாட்களாக பனியன் நிறுவனங்கள் போனஸ் பட்டுவாடா செய்தன.

தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியை கொண்டாடிவிட்டு திரும்ப ஒரு வாரம் ஆகும்.

எனவே அனைத்து நிறுவனங்களும் 1 வாரத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று முதலே தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கினர்.

கூட்ட நெரிசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

நெரிசலை தடுக்க போலீசார் தடுப்பு கம்பிகளை அமைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். நேற்று முதல் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

நேற்று ஜவுளி, நகை, பட்டாசு, பலகார கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் நகரம் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் இருந்தது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால் திருப்பூர் மாநகரம் வெறிச்சோடி காணப்பட்டது. உள்ளூர் மக்கள் தீபாவளியை கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்கள்.
Tags:    

Similar News