செய்திகள்
பாஜக

ரூ.5 ஆயிரம் பரிசு கூப்பன் கொடுத்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது- பாரதீய ஜனதா குற்றச்சாட்டு

Published On 2019-10-25 11:51 GMT   |   Update On 2019-10-25 11:51 GMT
புதுவையில் விதிகளை மீறி ரூ.5 ஆயிரம் பரிசு கூப்பன்களை வழங்கி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

புதுச்சேரி, அக. 25-

மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பத £வது:-

நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடி என்ற பொய்யான பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் செய்தபோதும், இன்றைய தினம் மராட்டியம் மற்றும் அரியானாவில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி எதிர்க் கட்சிகளின் பொய் பிரசாரத் துக்கு கிடைத்த மரண அடி.

நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ஊழலற்ற ஆட்சிக்கு ஆதரவு அளித்து வருவது வரவேற்கத்தக்கது.

அதேவேளையில் புதுவை மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு அதிகார துஷ்பிர யோகம், பொய்பிரசாரம் மற்றும் ஊழல் பணம் இவற்றைக்கொண்டு மக்களின் அறியாமை மூலம், மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி குறுக்குவழியில் வெற்றி பெற்றுள்ளனர்.

புதுவை மாநிலத்தில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சட்டவிரோத வியாபாரி களை கொண்டு, அவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தி அதன் மூலம் வரும் பணத்தை பயன்படுத்தி வெற்றி பெறுவதே வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலை தொடர்ந் தால் படித்தவர்கள், நேர்மை யானவர்கள், ஏழைகள் எந்த வகையிலும் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு பெற புதுவை மாநிலத்தில் வாய்ப்பு இல்லை என்று மக்கள் உணர வேண்டும்.

முதலில் ஆங்கிலேயர்கள் வணிகம் செய்வதற்காக நம் நாட்டிற்குள் நுழைந்து மக்களின் அறியாமையை பயன்படுத்தி நம்மை 350 ஆண்டுகள் அடிமைப்படுத் தினர்.

அதேபோல புதுவை மாநிலத்தில் தவறான வியாபாரம் செய்பவர்கள் ஆங்கிலேயர்கள் வழியில் மக்களின் அறியாமையை பயன்படுத்தி 50 ஆண்டுகளாக புதுவை மாநிலத்தை சீரழித்து வருகின்றனர்.

தேர்தல் நாளன்று கூட விதிகளை மீறி ரூ.5 ஆயிரம் பரிசு கூப்பன்களை வழங்கி வெற்றியை பெற்றுள்ளார் கள். இந்த வெற்றி நியாய மான வெற்றி இல்லை, இது ஜனநாயகத்துக்கு விரோத மான வெற்றி.

இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

Tags:    

Similar News