செய்திகள்
சபரிமலை

சபரிமலைக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை

Published On 2019-10-24 02:19 GMT   |   Update On 2019-10-24 02:19 GMT
தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இனி எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களும் எடுத்து செல்ல வேண்டாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
சென்னை :

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில ஐகோர்ட்டு உத்தரவின்படி ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வரும்போது நிலக்கல் அல்லது எருமேலி பகுதிகளுக்கு எவ்வகையான பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி முதல் தொடங்கவுள்ள நடைதிறப்பு காலத்தின்போது ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என கேரள மாநில அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-



தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இனி எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களும் எடுத்து செல்ல வேண்டாம் எனவும், பம்பையில் பக்தர்கள் தாங்கள் உடுத்தியுள்ள துணிகளைக் களைந்து நதியில் விட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் மூலம் ஐயப்ப குருசாமிகளை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News