செய்திகள்
கோப்புப்படம்

தீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை

Published On 2019-10-23 10:50 GMT   |   Update On 2019-10-23 10:50 GMT
சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி நாளை முதல் 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து வழக்கமான பஸ்கள், சிறப்பு பஸ்கள் என மொத்தம் 10,940 பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தினமும் இயக்கப்படும் தலா 2,225 பஸ்களுடன் கூடுதலாக 3 நாட்களும் 4,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதாவது 3 நாட்களும் மொத்தம் 10,940 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், கே.கே.நகர் பஸ்நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக நாளை முதல் 26-ம் தேதி வரை 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் அக். 26-ம் தேதி வரை 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு மக்கள் செல்ல ஏதுவாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News