செய்திகள்
நிலவேம்பு கசாயம் வழங்கியபோது எடுத்த படம்.

பென்னாகரம் ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்

Published On 2019-10-22 13:23 GMT   |   Update On 2019-10-22 13:23 GMT
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மற்றும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
பென்னாகரம்:

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கள்ளிபுரம் கிராமத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மற்றும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இதையொட்டி கிராமம் முழுவதும் கொசு புழு ஒழிப்புப் பணி மற்றும் கொசுமருந்து அடிக்கப்பட்டது. கிராமம் முழுவதும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. காய்ச்சல் வந்தால் சுயமாகா மருந்து கடைகள் மாத்திரை வாங்கிப்போட கூடாது. காய்ச்சல் வந்தஉடன் அரசு மருத்துவமனைக்கு வருமாரு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. கிராமம் முழுவதும் தூய்மைபணி நடைபெற்று வீடு, வீடாகசென்று காய்ச்சல் கண்காணிப்பு பணி நடந்தது.

முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்திவேல் மற்றும் டாக்டர் பாபு, டாக்டர் கங்காதரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மதியழகன், செந்தில் குமார் மற்றும் ஊராட்சி செயலாளர் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவ குழுவினர் ஆகியோர் முகாமிட்டு டெங்கு காய்ச்சல் தடுப்புபணி செய்தனர். மேலும், இதில் ஒலிப்பெருக்கி மூலம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Tags:    

Similar News