செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

7 பேர் விடுதலை விவகாரம்: கவர்னரை அரசு வற்புறுத்த முடியாது- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2019-10-22 06:47 GMT   |   Update On 2019-10-22 06:47 GMT
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கவர்னரை அரசு வற்புறுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ் கொலை வழக்கில் ஜெயிலில் இருக்கும் 7 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு.

ஆனால் கவர்னர்தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக கவர்னர் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவு எதையும் அறிவிக்கவில்லை. 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கவர்னரை அரசு வற்புறுத்த முடியாது.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க கூடாது. தமிழும், ஆங்கிலமும் என்ற இரு மொழிக்கொள்கையே உள்ளது. மற்ற மொழி எதுவேண்டுமானாலும் விருப்பத்தின் பேரில் கற்றுக்கொள்ளலாம்.

பொதுவாக கூட்டாச்சி தத்துவத்தின்படி மொழி திணிப்பு கூடாது. இந்தி திணிப்பால் 67-ல் நடந்த பிரச்சனைகள் மத்திய அரசுக்கும் தெரியும். எனவே இந்தியை திணிக்காது.


பிரதமர் மோடி தமிழ் மீது காதல் கொண்டவர். அதனால் தான் தமிழின் பெருமைகளை அறிந்து உலகம் முழுவதும் குறிப்பிட்டு வருகிறார். அதேபோல் மற்ற மத்திய மந்திரிகளும் தமிழின் பெருமையை உணர்ந்து இருக்கிறார்கள். எனவே தமிழுக்கு எந்த ஊறும் வராது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News