செய்திகள்
கூட்டத்தில் ஸ்டேட் வங்கி சென்னை வட்ட பொதுச் செயலாளர் கிருபாகரன் பேசிய போது எடுத்த படம்.

ஊழியர்கள் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்கள் சேவை பாதிப்பு

Published On 2019-10-21 18:02 GMT   |   Update On 2019-10-21 18:02 GMT
ஊழியர்கள் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்கள் சேவை பாதிக்கப்பட்டு வருகின்றன என்று ஸ்டேட் வங்கி சென்னை வட்ட பொதுச்செயலாளர் கூறினார்.
தஞ்சாவூர்:

ஸ்டேட் வங்கி சென்னை வட்ட ஊழியர்கள் சங்க கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சுகுணாகர், கிரு‌‌ஷ்ணமூர்த்தி, பொருளாளர் காஜாபக்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுச்செயலாளர் கிருபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர்கள் பாஸ்கரன், தமிழ்ச்செல்வன், ரவிச்சந்திரன், உதவிப்பொதுச்செயலாளர்கள் ராஜவேல், பாண்டி, ஆண்ட்ரூஸ்பால்ராஜ், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து ெசன்ைனை வட்ட் பொதுச்செயலாளர் கிருபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வங்கிகளில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக வாடிக்கையாளர்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. வங்கிகளை இணைப்பதன் மூலம் ஊழியர்களின் வேலை பறிபோகும் என போராடுவதாகவும், ஊழியர்களின் வேலை பறிபோகாது என மத்திய மந்திரி கூறி உள்ளார். ஊழியர்களில் வேலை பறிபோகும் என்பதற்காக நாங்கள் போராட வில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது என்பதால் போராடுகிறோம் என தெரிவித்தோம். ஆனால் அதற்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.

வாராக்கடன் அதிகமாக இருப்பதற்கு பெரும் முதலாளிகளுக்கு கொடுத்த கடன் தான். அவர்கள் கடனை திருப்பி செலுத்துவதில்லை. இதனால் முதலீடு தேவைப்படுகிறது. எனவே தனியார் முதலீடு செய்ய வேண்டிய நிலை வரும். எனவே மத்திய அரசு வங்கிகளுக்கு முதலீடு அளிக்க வேண்டும்.

கடந்த 9 மாதமாக ஊதிய உயர்வு கேட்டு போராடி வருகிறோம். கடந்த 10-வது ஊதியக்குழுவின் போது 15 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. தற்போது 15 சதவீதத்துக்கும் அதிகமாக ஊதிய உயர்வு கேட்டு வருகிறாம். கடந்த முறை நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் விரைவில் இதற்கு முடிவு எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இணைப்பதால் எந்தவித பயனும் இல்லை. வங்கிளில் ஏழைகள் தான் முதலீடு செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News