செய்திகள்
கனமழை

போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை

Published On 2019-10-21 15:23 GMT   |   Update On 2019-10-21 15:23 GMT
இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
போச்சம்பள்ளி:

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டு கடலோரப் பகுதிகளில் மணிக்கு 4,055 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.                                                                                            

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த இருதினங்களாக வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், நேற்று மாலை 3 மணிக்கு போச்சப்பள்ளி சுற்றுப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் கனமழை பெய்தது. அகரம் செல்லம்பட்டி, பண்ணந்தூர், அரசம்பட்டி, புலியூர், புளியம்பட்டி,  உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இன்று அதிகாலையிலும் இந்த பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் குடைபிடித்தபடியே சாலைகளில் சென்றனர். பள்ளி மாணவர்கள் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர். இப்பகுதி நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். போச்சம்பள்ளி பகுதிகளில் பெய்த மழைஅளவு பின்வருமாறு:-

பாரூர் 28மி.மீ., நெடுங்கல் 45மி.மீ, பெனகுண்டாபுரம்  35.2மி.மீ. எனவும் அதிகபட்சமாக போச்சம்பள்ளியில் 60.2 மில்லிமீட்டர் எனவும் மழை பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News